×

திருவள்ளூர் நகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகராட்சியாக விரைவில் அறிவிக்கப்படும்: நகராட்சி ஆணையர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ஆணையர் பொறுப்பு எம்.நாகூர் மீரான் ஒலி  வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு 14 ஆயிரத்து 14 குடியிருப்புகளும், 56 ஆயிரத்து 56 மக்கள்தொகையும் கொண்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடம் இல்லாத வீடுகளை கணக்கெடுப்பு செய்து தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகத்திடமும் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளியில்  ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவறை மற்றும் வீடுகளில் உள்ள கழிவறைகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும், திறந்தவெளி கழிப்பிடமாக எந்த பகுதியும் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகள் அடங்கிய அனைத்து பகுதிகளையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாகவும் 100 சதவீதம் கழிப்பிடம் பயன்பாடு உள்ளதாகவும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் மேலான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post திருவள்ளூர் நகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகராட்சியாக விரைவில் அறிவிக்கப்படும்: நகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Municipality ,Thiruvallur ,Commissioner ,M.Nagur Meeran Oli ,Municipality ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...